அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணங்கள் குறைப்பு

அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் 10 சதவீதத்தினால் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்இ காலி வீதி வழியாகஇ கொழும்பு – கதிர்காமத்துக்கு இடையில் முன்னெடுக்கப்படும் அரை சொகுசு பேருந்து சேவைகள் ரத்துச்செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சாதாரண பேருந்துகளின் பேருந்து கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை என்று பேருந்து உரிமையாளர் சங்கங்கள் தெரிவித்தன.

பேருந்து கட்டணத்தை குறைக்கும் அளவுக்கு எரிபொருள் குறைப்பு இல்லை என்றும்இ பேருந்து கட்டணம் குறித்து கலந்துரையாடுவதற்கு குறைந்தது 4 சதவீதத்தினாலாவது எரிபொருள் விலை குறைக்கப்பட வேண்டும் என்று குறித்த சங்கங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.