ஐந்து கோடி பெறுமதியான ஹெரோயின்: ஒருவர் கைது

பாணந்துறையில் ஐந்து கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை வலபொல பகுதியை சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பாணந்துறை, வலபொல பிரதேசத்தில் உள்ள வீதியில் வைத்து சந்தேகநபரிடம் இருந்து இரண்டு கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சந்தேக நபரிடம் தற்போது மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்க்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்