பாகிஸ்தானில் பெய்த கனமழையால் இதுவரை 243 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகளால் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 243 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் இன்று வெள்ளிக்கிழமை வடமேற்கு பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புனர் மாவட்டத்தில் 157 பேர் உயிரிழந்தனர்.

வெள்ளப்பெருகில் சிக்குண்ட பல நூற்றுக்கணக்கான மக்கள் இன்னும் காணவில்லை என்றும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.

வெள்ளிக்கிழமை நண்பகல் வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 78 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், பின்னர் இடிந்து விழுந்த வீடுகள் மற்றும் வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்களின் இடிபாடுகளில் இருந்து மேலும் 79 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிப்புக்கள் குறித்த சரியான தரவுகள் இதுவரை கிடைக்கவில்லை.