எச்சரிக்கை : எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் பலத்த மழை
எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், ஏனைய பிரதேசங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது