‘ஹரக் கட்டா’ மருத்துவமனையில் அனுமதி

‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிக்குன்குனியா தொற்று காரணமாக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரின் கடுமையான பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.