வாக்குவாதம் முற்றியதில் துப்பாக்கி பிரயோகம்

பாணந்துறை-சில்வன் லேன் பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று புதன்கிழமை இரவு சட்டத்தரணி ஒருவரினால் இத்துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் துப்பாக்கிச் சூடு நடத்திய சட்டத்தரணி மற்றும் இரண்டு பெண்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் பாணந்துறை-சில்வன் லேன் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கடன் கொடுத்துள்ளார்.

பணம் கொடுக்காதது குறித்து விசாரிப்பதற்காக குறித்த பெண் சட்டத்தரணியுடன் அங்கு சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, ​​குறித்த சட்டத்தரணி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.