
GSP + வரிச் சலுகைகளை இழக்கிறதா இலங்கை?
இலங்கையின் புதிய சட்டமூலத்தின் உள்ளடக்கம் தொடர்பில் அமெரிக்கா தமது அதிருப்தியை வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க ஊடாகத் தெரிவித்துள்ளது. அத்தோடு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் சில பிரதிநிதிகளும், இது தொடர்பில், தமது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சட்டமூலம் மாற்றப்படாவிட்டால், முன்னுரிமை வர்த்தகம் மூலம் வர்த்தக உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று, இலங்கை வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தனவிடம் இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் GSP ப்ளஸ் வரிச் சலுகைகளை இழக்க கூடிய அபாயம் காணப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
