தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்னும் இரண்டு நாட்களில் பணிகளை முடிக்க முடியும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 18ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 334இ698 ஆகும்.