
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் குழப்பம்
5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது வழங்கப்பட்ட பரீட்சை வினாத்தாள் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்த வினா தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் தெரிவித்ததாக அவர்களது பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வினாப்பத்திரத்தின் 42 ஆவது கேள்வியில், சர்வதேச விமான நிலையங்கள் இரண்டினைக் குறிப்பிடும் விடை எது என கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு விடைகளாக,
1. கட்டுநாயக்க மற்றும் இரத்மலானை
2. கட்டுநாயக்க மற்றும் மத்தள
3. மத்தள மற்றும் பலாலி என்பவை கொடுக்கப்பட்டுள்ளது
இங்கு குறிப்பிட்ட 3 விமான நிலையங்களும் சர்வதேச விமான நிலையங்கள் என பெற்றோரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரால் இந்த முறைப்பாடுகள் பரீட்சை திணைக்களத்துக்கு வந்துள்ள நிலையில், விடைத்தாள்களை சரிபார்க்கும் முன் வல்லுநர் குழுவால் இந்த வினா சரிபார்க்கப்படும், என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.