வகுப்புகளுக்கு தடை : மீறினால் முறைப்பாடு செய்யுமாறு கோரிக்கை

2022ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்துவது எதிர்வரும் புதன்கிழமை முதல் தடைசெய்யப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில் பரீட்சை முடியும் வரை இந்த தடை நீடிக்கும் என ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பாடம் சார்ந்த விரிவுரையாளர்கள், கருத்தரங்குகள் அல்லது வகுப்புகளை ஏற்பாடு செய்தல், பரீட்சை சார்ந்த தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் மற்றும் பரீட்சைக்கு முன்னர் இதே போன்ற கேள்விகளை வழங்குவதாகக் கூறி இலத்திரனியல் ஊடகங்கள், சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் மூலம் விளம்பரம் செய்தல் என்பன கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.

ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனம் விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திலோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு அழைப்பதன் மூலம் முறைப்பாடுகளை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ தலைமையகம் :- 0112421111

பொலிஸ் அவசர பிரிவு :- 119

அவசர இலக்கம் – பரீட்சைகள் திணைக்களம் :- 1911

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் :-  0112785211, 011275212

பாடசாலை பரீட்சைகள் ஏற்பாடு கிளை :-  0112784208,  0112784537