அரச உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரை: 17 இலட்சம் மோசடி

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் கரவெட்டியில் அமைந்து இருக்கும் ஆலயம் ஒன்றில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரின் ரபர் முத்திரையை போலியாகத் தயாரித்து 17 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆலயத்தின் தலைவரே இவ்வாறு ஆலய நிலையான வைப்பில் இருந்த பெருந்தொகையான நிதியை களவாடியுள்ளார்.

2023 ஐப்பசி மாதமளவில் 10 இலட்சம், 2024 தை மாதமளவில் 7 இலட்சம் இதற்காக போலியாக கூட்டறிக்கை தயாரித்தும் கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையையும் போலியாக தானகவே செய்து நெல்லியடி பிரபல வங்கியிலிருந்த பணத்தை களவாடியள்ளார்.

இதேவளை இவர்களின் மோசடி அம்பலம் ஆகியதும் உபதலைவர், பொருளாளர் தாமாகவே முன்வந்து பணத்தை வட்டியும் முதலுமாகக் செலுத்தியுள்ளனர் .

இம்மோசடி தொடர்பாக நிர்வாகம் எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது இருப்பது மிகவும் மனவேதனை அளிக்கும் நிலையில் அரச முத்திரையை போலியாக தயாரித்தமைக்கு கரவெட்டி உத்தியோகத்தர் பிரதேசசெயலகம் நடவடிக்கைகள் எடுக்குமா ?

குறித்த விடயம் தொடர்பில் கரவெட்டி பிரதேச செயலாளரை தொடர்புகொண்டு கேட்டபோது போலி ரபர் முத்திரை பயன்படுத்த பணம் எடுக்கப்பட்டமை உண்மை எனவும் அது தொடர்பில் மல்லாகம் பொலிஸ் நிலையததில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்