
இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் வெளியிட்ட அறிவிப்பின் படி, தங்கத்தின் விலை சுமார் 10,000. ரூபாவால் குறைந்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வினால் இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய நிலவரப்படி, பவுண் ஒன்றிற்கு 24 கரட் தங்கத்தின் விலை ரூ. 165,000, அதே சமயம் 22 கரட் ரூ. 152,000 ஆக உள்ளது.
