இலங்கையில் இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தங்க விலை வீழ்ச்சியின் பிரதிபலிப்பாக, இலங்கையின் ஆபரணத் தங்கச் சந்தையிலும் இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,720 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 73.79 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 388,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 357,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,626 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
