இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!
இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதன்படி, 406,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளது.
24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 408,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 375,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் விலை 51,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலை 46,913 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது
