சர்வதேச சந்தையில் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று வெள்ளிக்கிழமை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 54.18 டொலர்கள் அதிகரித்து 4,437.16 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
அதேபோல், வெள்ளி விலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 1.48 டொலர்களால் அதிகரித்து 69.31 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
