இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று புதன்கிழமை தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றுடன் ஒப்பிடுகையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 1,000 ரூபாயினால் குறைந்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 407,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 374,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.