
கோகுலம் முன்பள்ளிப் பாடசாலை புனரமைப்புச் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது
-மூதூர் நிருபர்-
திருகோணமலை -குமாரபுரம் பகுதியில் இயங்கிவரும் கோகுலம் முன்பள்ளிப் பாடசாலை புனரமைப்புச் செய்யப்பட்டு நேற்று திங்கட்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழர் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா முதன்மை அதிதியாக கலந்து கொண்டு முன்பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இவ் முன்பள்ளியானது புலம்பெயர் தேசத்திலுள்ள நல்லுள்ளங்களின் நிதியுதவியுடன் புனரமைப்புச் செய்யப்பட்டது.
நிகழ்வின்போது முன்பள்ளி மாணவர்களுக்கு அன்பளிப்புக்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் திருமணமலை மாவட்ட சுழலும் சக்கர நாற்காலி சங்கத்தின் தலைவி, கிளிவெட்டி மகா வித்தியாலய அதிபர், அன்னை கலா மன்ற உறுப்பினர்கள், குமாரபுரம் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.





