15 வயது சிறுமியை காணவில்லை

-பதுளை நிருபர்-

லுணுகலையில் 15 வயதுடைய சிறுமியை காணவில்லை என லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரியகொட பகுதியில்,   லுணுகலை பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10ல் கல்வி பயிலும் 15 வயதுடைய  மாணவி ஒருவர் நேற்று சனிக்கிழமை காலை பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்கு சென்று வீடு திரும்பவில்லை, என குறித்த மாணவியின் தாயாரினால் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸாரும், மாணவியின் உறவினர்களும் இணைந்து தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.