
முத்தம் கொடுத்த புகைப்படத்தை வைத்து மிரட்டி பலமுறை வன்கொடுமை
தோழிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வைத்து மிரட்டி அவளை பலமுறை வன்கொடுமை செய்த சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் இந்தியா-மும்பையில் இடம்பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மும்பையில் 17 வயது சிறுவன் ஒருவன் தன் தோழியின் பிறந்தநாள் விழாவில் அவளுக்கு முத்தம் கொடுத்திருக்கிறான். அப்போது அவர்கள் இருவரும் முத்தம் கொடுப்பதை அந்த சிறுவன் செல்பி எடுத்து வைத்திருக்கிறான்.
அதன்பின் அந்த புகைப்படத்தை காட்டி, அதை வெளியிடுவேன் என மிரட்டி, கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் நவம்பர் 26ஆம் திகதி வரை பல முறை அவளை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறான்.
அந்த சிறுமியும் இதுகுறித்து வெளியில் சொல்ல முடியாமல் அவனிடம் மாட்டிக்கொண்டுள்ளார்.
இதையடுத்து அந்த சிறுமியை ஒரு நாள் வெளியில் அழைத்த போது அவள் வர மறுத்துள்ளார். அதனால் சிறுமியின் கல்லூரிக்கே சென்று அவளை தாக்கி இருக்கிறார் அந்த சிறுவன்.
இதை அறிந்த அந்த சிறுமியின் நண்பர் ஒருவர் அந்த சிறுமியின் பெற்றோரிடம் இதனை தெரிவித்துள்ளார்.
அதன் பின் குறித்த சிறுமி நடந்த அனைத்தையும் பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனே பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
குறித்த முறைப்பாட்டை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அந்த சிறுவனை மும்பை பொலிஸார் கைது செய்தனர். அந்த சிறுவன் மீது போக்சோ உட்பட பல வழக்குகள் பதியப்பட்டன. இதை தொடர்ந்து அந்த சிறுவன், சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் குறித்த சிறுவனும், பாதிக்கப்பட்ட சிறுமியும் 18 வயதிற்கு குறைவானவர்கள் என்பதால் அவர்களின் அடையாளங்களை பொலிஸார் வெளியிடவில்லை என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
