
புலமைப் பரிசில் மாணவர்களுக்கு இலவச வழிகாட்டி நூல்கள் அன்பளிப்பு
திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வுக்குத் தோற்றும் மாணவர்களது பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கோடு மூதூர் கோட்டத்தில் உள்ள பாட்டாளி புரம், நீலாங்கேணி, இளக்கந்தை, நல்லூர் ஆகிய பின்தங்கிய ஊர்களில் அமைந்துள்ள பள்ளிக்கூடங்களில் கல்வி பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவருக்கு ஒவ்வொருவருக்கும் தலா 1930 ரூபா விலையான ஆற்றல் என்னும் புலமைப்பரிசில் தேர்வு வழிகாட்டி நூல்கள் இன்று வியாழக்கிழமை திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் வழங்கப்பட்டது.
இந்நூல்களை திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் கதிரவேலு சண்முகம் குகதாசன், செயலாளர் கணபதிப்பிள்ளை சிவானந்தன், பொருளாளர் இராசரத்தினம் கோகுலதாசன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
இதில் ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
