
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!
QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை (Quota) இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, வாகனங்களுக்கான புதிய எரிபொருள் ஒதுக்கீட்டு விபரங்கள் பின்வருமாறு:
கார்கள்: 15 லீற்றரிலிருந்து 25 லீற்றர் வரை அதிகரிப்பு.
முச்சக்கரவண்டிகள்: எரிபொருள் ஒதுக்கீடு 20 லீற்றர் வரை அதிகரிப்பு.
வேன்கள்: 50 லீற்றர் வரை அதிகரிப்பு.
மோட்டார் சைக்கிள்கள்: 8 லீற்றர் வரை அதிகரிப்பு.
பேருந்துகள் : 100 லீற்றர் வரை அதிகரிப்பு.
எரிபொருள் விநியோகத்தை சீர்செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
