எரிபொருள் விலையில் பாரிய மாற்றம்

 

இலங்கையில் எரிபொருள் விலை இம்முறை பாரியளவிற்கு குறைவடைவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக சந்தையில் ப்ரெண்ட் ரக கச்சா எண்ணை பீப்பாய் 72.63 டொலர் மற்றும் டபிள்யு.டீ.ஐ கச்சா எண்ணெய் பீப்பாய் 66.30 டொலர் என்ற அளவில் குறைவடைந்துள்ளது.

இது உலக எரிபொருள் சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு நொவம்பருக்குப் பின்னர் ஏற்பட்ட அதிகூடிய வீழ்ச்சியாகும்.

இலங்கையில் கடந்த ஆண்டு ஜுன் முதல் கிரய விளைவுகள் அடிப்படையிலான எரிபொருள் விலைசூத்திரம் நடைமுறையில் உள்ளது.

அதனடிப்படையில் இம்முறை எரிபொருள் விலை பாரியளவுக்கு குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எரிபொருள் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.