
எரிபொருள் விலை தொடர்பாக அமைச்சரின் அறிவித்தல்
எரிபொருள் விலை சூத்திரம் மாதத்திற்கு ஒரு முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இது தொடர்பான பிரேரணை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் 50வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வில் நேற்று சனிக்கிழமை அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
‘எரிபொருள் விலை சூத்திரம் மாதத்திற்கு இரண்டு முறை, ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், விநியோகத்தர்களுக்கு நிதி இழப்பு ஏற்படும் என்பதால், இரண்டு நாட்களுக்கு முன்பு கொள்வனவு (Order) செய்யாமல் இருப்பது அவதானிக்கப்பட்டது, ‘என்று அவர் கூட்டத்தில் உரையாற்றினார்.
‘எனவே, எரிபொருள் விலை சூத்திரத்தை மாதத்திற்கு ஒருமுறை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான பிரேரணை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.
