பொசன் போயாவை முன்னிட்டு இலவச சிறப்பு ரயில் சேவை
அனுராதபுரம் – மிஹிந்தலை இடையே இலவச சிறப்பு ரயில்கள் சேவையை இன்று செவ்வாய் கிழமை முதல் ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொசன் போயாவை முன்னிட்டு மிஹிந்தலைக்கு வரும் பக்தர்களுக்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படாமல் இந்த இலவச ரயில் சேவை முன்னெடுக்கப்பட்ட உள்ளது.
கொழும்பிலிருந்து மஹவ நோக்கி ரயிலில் வரும் பயணிகளுக்காக மஹவ ரயில் நிலையத்தில் இருந்து அனுராதபுரம் வரை விசேட பேருந்து சேவையை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளைமஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையில் 400 மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
