இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை

உத்தியோகபூர்வ தேர்தல் தொடர்பான பணிகளை முடிக்க இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

எழுத்து மூலம் இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளர் உபாலி ஹேவகே தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில், உத்தியோகபூர்வ தேர்தல் தொடர்பான பணிகளை ஜனவரி 3 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யாவிட்டால் இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு தடை விதிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரித்திருந்துள்ளது.