நாட்டின் பல இடங்களில் பனிமூட்டமான வானிலை

நாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் எதிர்வுகூறியுள்ளது.

இன்று அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அதிகாலை வேளையில் நாட்டின் பல இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.