சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் வெள்ளம் இராணுவ உதவி கோரப்பட்டுள்ளது : பொலிசார் அவசர எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் வாலிஸ் மாநிலம் அவசரகால  நெருக்கடியை எதிர்கொள்ளுவதற்காக இராணுவத்தின் உதவியை கோரியுள்ளது, இது நெருக்கடியைச் சமாளிக்க உதவும் நோக்கம் கொண்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து மற்றும் வடக்கு இத்தாலியில் ஏற்பட்ட புயல் , வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக குறைந்தது நான்கு பேர் இறந்துள்ளனர் என்று அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

வாலிஸ் மாநிலத்தின் சிடேஸ் சிப்பிஸ் (Siders/Chippis) பிராந்தியத்தில்  அவசர சேவைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே தளத்தில் இருப்பதால்  மேலதிகமாக இராணுவத்தின் உதவி அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கில் சிக்கி சாஸ் கிரண்டில் (Saas Grund)  ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவரை காணவில்லை.  துணை  நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதோடு, காடுகளில் உள்ள குப்பைகள் வெள்ளநீருடன் சேர்ந்து ஓடுவதால் ராரோன் (Raron) மற்றும் கம்பல் (Gampal)  மற்றும் சிப்பிஸ் (Chipps)  சிடேஸ் ( Siders ) போன்ற பல இடங்களில் கிளை நதிகளின் கரைகளை நிரம்பி வழிகின்றது. 

அவசரகால மற்றும் மீட்புப் பணியாளர்களுக்காக போக்குவரத்து சாலைகளை தெளிவாக வைத்திருக்க பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை மட்டுப்படுத்துமாறு பொலிசார் அவசரமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வலே மாநிலத்தின் பள்ளத்தாக்குகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ராரோன் மற்றும் கம்பல் அல்லது சிப்பிஸ் மற்றும் சிடேஸ்  போன்ற பல்வேறு இடங்களில் சிறு ஓடைகள் நிரம்பி வழிகிறது. இப்பகுதியை அண்டியுள்ள பல நூற்றுக் கணக்கானோர்; வெளியேற்றப்பட வேண்டியிருக்கின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிம்லோன்  (Simplon) பாதை அனைத்து போக்குவரத்துக்கும் மூடப்பட்டுள்ளது, மாநிலத்தின் பல சாலைகள் மூடப்பட்டன. சிடேஸ் ( Siders) மற்றும் சியோன் (sion) இடையேயான நெடுஞ்சாலையும் மூடப்பட்டுள்ளது. சிம்லோன் ரயில் பாதையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வலேமாநிலத்தில் 22 நிர்வாகக் குழுக்கள் இதில் ஈடுபட்டுள்ளன. தற்போது 35க்கும் மேற்பட்ட வெவ்வேறு படைகளைச் சேர்ந்த 700 தீயணைப்பு வீரர்கள், 130 சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள், போக்குவரத்து உள்கட்டமைப்பிற்குப் பொறுப்பான துறைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் நகராட்சி சேவைகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் அவசரகால சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்