இலங்கையில் 14 வருடங்களின் பின் மலேரியா மரணம் பதிவு
இலங்கையில் 14 வருடங்களின் பின்னர் மலேரியா மரணம் பதிவாகியுள்ளதாக களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பேருவளையைச் சேர்ந்த ஒருவரே மலேரியா நோயினால் உயிரிழந்துள்ளதாக, களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் தாமர களுபோவில தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் கடந்த 4 மாதங்களில் இலங்கையில் 11 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் 37 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக இதன் பணிப்பாளர் வைத்தியர் சம்பா அளுத்வீர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கடந்த வருடத்தின் முதல் 4 மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மலேரியா நோயாளிகள் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
