நெருப்பை வழிபடும் இந்து பெண்ணுக்கும் முஸ்லிம் ஆணுக்கும் நடக்கும் திருமணம் செல்லாது – நீதிமன்றம் தீர்ப்பு

நெருப்பை வழிபடும் இந்து பெண்ணுக்கும் முஸ்லிம் ஆணுக்கும் நடக்கும் திருமணம் செல்லாது முஸ்லிம் ஆணுக்கும், இந்த பொண்ணுக்கும் இடையிலான திருமணம் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் செல்லாது எனவும், மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆணும், இந்து மதத்தை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் அவர்களின் காதலை, பெண்ணின் குடும்பத்தார் ஏதிர்த்துள்ளனர். இந்நிலையில் சிறப்பு திருமண சட்டம், 1954இன் கீழ் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும் தம்பதி, மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

குறித்த மனுவை விசாரித்த நீதிபதி குர்பால் சிங் அலுவாலியா, முஸ்லிம் தனிச் சட்டத்தின் கீழ் நெருப்பை வழிபடும் இந்து பெண்ணுக்கும் முஸ்லிம் ஆணுக்கும் நடக்கும் திருமணம் செல்லாது. அவர்கள் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்திருந்தாலும், முஸ்லிம் தனி சட்டத்தின் கீழ் அது ஒழுங்கற்ற திருமணமாக கருதப்படும் என்று தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் மத சடங்குகள் நடைபெறாத காரணத்தால் கலப்பு திருமணத்திற்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்றாலும் தனிச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டால் இம்மாதிரியான திருமணங்கள் சட்டபூர்வ திருமணமாக கருத முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்