
அமெரிக்காவின் ஆதரவு தேவை – பின்லாந்து பிரதமர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்க ஐரோப்பா மட்டும் போதாது என பின்லாந்து பிரதமர் சானா மரின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்க அமெரிக்காவின் ஆதரவு தேவை என்றும், ஐரோப்பாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் பின்லாந்து பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
