
பெண் சத்திரசிகிச்சை நிபுணர்கள் ஆடை மாற்றும் இடத்தில் ஒளிப்பதிவு : வக்கிரமான நபர் கைது
கண்டி தேசிய வைத்தியசாலையின் ஆடை மாற்றும் அறையில் இரகசியமான இடத்தில் கைத்தொலைபேசியை வைத்து பெண் சத்திரசிகிச்சை நிபுணர்கள் பணிக்கான ஆடைகளை மாற்றுவதை வீடியோ ஒளிப்பதிவு செய்த வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆடைமாற்றும் இடத்தில் மறைவான கைத்தொலைபேசியை அவதானித்த பெண் வைத்தியர் ஒருவர் அதனைப் பரிசோதித்தபோது அவரும் ஆடை மாற்றும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த காட்சியை அழித்துவிட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக கண்டி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து குறித்த ஊழியரிடம் மேற்கொள்ளப்படட விசாரணையில், பெண் மருத்துவர்களின் உடை மாற்றும் அறையில், வீடியோ பதிவு செய்யும் பழக்கம் தனக்கு இருப்பதாகவும், அவற்றைப் பார்த்துவிட்டு உடனே அழித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஒரு பெண் வைத்தியர் ஒருவர் ஆடைகளை மாற்றும் காட்சி மட்டும் கையடக்க தொலைபேசியில் இருந்த நிலையில் சந்தேக நபர் பொலிஸாரை விசாரித்த போது அவர் மிகவும் அழகான பெண் எனவும் குறிப்பிட்ட அந்த காணொளியை மட்டும் தான் நீக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
