வாய்த்தர்க்கம் முற்றியதில் மருமகனை கொன்ற மாமனார்!

கலேன்பிந்துனுவெவ பகுதியில், தனிப்பட்ட தகராறு காரணமாக, 57 வயதுடைய நபர் ஒருவர், தனது மாமனாரால் கட்டுத்துவக்கினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இருவருக்குமிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை தொடர்ந்து, சந்தேகநபர் தனது மருமகனை இவ்வாறு துப்பாக்கியால் சுட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான, இஹலகலவைச் சேர்ந்த நபர், பலத்த காயங்களுடன் கலேன்பிந்துனுவெவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்தார்.

சந்தேக நபரைக் கைது செய்ய கலேன்பிந்துனுவெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.