எக்ஸ்பிரஸ் பேர்ல் சிதைவுகளை மீட்க வருகிறது சீனக் கப்பல்

இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சிதைவுகளை மீட்பதற்காக சீனக் கப்பல் ஒன்று இலங்கையின் கடற்பகுதியை வந்தடைய உள்ளது.

இந்த கப்பல் நாளை புதன்கிழமை அல்லது நாளை மறுதினம் இலங்கைக்கு வரும் என கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த கப்பல் இலங்கை கடல் பகுதியில் சில நாட்கள் தங்கியிருந்து எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொள்ளும்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் மூழ்கியதன் பின்னர் சிதறிய 1700 மெற்றிக் தொன் கழிவுப்பொருட்கள் நீர்கொழும்பு – பமுனுகம பகுதியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.