ஏறாவூர் மக்களின் முன்னுதாரண செயற்பாடுகள்

தொடர்ச்சியாகப் பொழிந்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் வழிந்தோடுவதற்கேற்ற வடிகாலமைப்பு முறை உரிய முறையில் பேணப்படாமையால் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலமும், அதையண்டிய ஏறாவூர் 4, எல்லைநகர் கிராமங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நேற்றைய தினமும் இன்றைய தினமும் ஏறாவூர் கணேஷ காளிகா ஆலயத்தின் தலைவர் குமாரின் ஏற்பாட்டில் ஏறாவூர் கிராம் அபிவிருத்திச் சங்கச் செயலாளர் அன்ரனி , பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் நிலோஜினி மோகனதாஸ் , எமது பாடசாலைப் பழைய மாணவன் பிரஷாந்த் ஆகியோருடன் பொதுமக்கள் பலரும் இணைந்து வடிகாலமைப்புக்குரிய சிரமதானத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னுதாரணமாக பொதுநல நோக்கோடு தமது உடல் உள நிலையை பாராது ஆத்மார்த்தமாக இப்பணியில் இணைந்துள்ளமை வரவேற்கதக்க விடயமாகும்.