இந்த வருடத்தின் நாணயமாற்று விகிதங்களின் ஒப்பீடு
ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2022 வரையிலான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை வீதம் இந்த வருடத்தின் முதல் வேலை நாளான ஜனவரி 3 அன்று 202.99 ரூபாவாக இருந்தது.
இருப்பினும், 2022 இன் கடைசி வேலை நாளான இன்று டிசம்பர் 30 அன்று, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371. 60 ரூபாவாக காணப்படுகின்றது.
இந்த வருடத்தில் மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் கணிசமாக குறைந்துள்ளது.