
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
அமெரிக்க டொலர் உட்பட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி பெருமளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 63 சதமாகவும், விற்பனை பெறுமதி 371 ரூபா 22 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 415 ரூபா 38 சதமாகவும், விற்பனை பெறுமதி 431 ரூபா 57 சதமாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 60 சதமாகவும், விற்பனை பெறுமதி 372 ரூபா 76 சதமாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 12 சதமாகவும், விற்பனை பெறுமதி 242 ரூபா 20 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 44 சதமாகவும், விற்பனை பெறுமதி 2 ரூபா 54 சதமாகவும் பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

