புதையல் தேடிய அகழ்வு பணி நிறுத்தப்பட்டது

-யாழ் நிருபர்-

கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி கடந்த வெள்ளிக்கிழமை அகழ்வு பணிகள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.

17 அடி வரை அகழ்வு பணிகள் நடைபெற்ற நிலையில் இடைநிறுத்தப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை  மீண்டும் இடம்பெற்றது.

இந்த நிலையில், நேற்று அகழ்வு பணி இடம்பெற்ற இடத்தில் எந்த சான்று பொருட்களும் காணப்படாத காரணத்தினால் கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் துபராகினி ஜெகநாதன் அகழ்வு பணியை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்