ஏறாவூரில் கோடரியால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை
ஏறாவூர் தளவாய் பகுதியில் இன்று சனிக்கிழமை கோடரியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இருவருக்கு இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றிய நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் தளவாய் சின்னத்தம்பி வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் , இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
