ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் தலைமையிலான அடுத்த ஆண்டுக்கான ஏறாவூர் நகரசபையின் வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தது.
ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ். நளீமினால் இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட, வரவு செலவுத்திட்டம் நகர சபையின் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தலைமையில் நடைபெற்றது.
- Advertisement -
இதன் போது இடம்பெற்ற முதலாவது வாக்கெடுப்பில் ஒன்பதுக்கு எட்டு என்றவாறு வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தது.
எம்.எஸ். நளீமீன் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 08 உறுப்பினர்களும், எதிராக 09 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் மூலம் வரவு செலவுத்திட்டம் ஒரு மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்தது.
இதே வேளை இரண்டாவது வாக்கெடுப்பு இன்று மாலை 04 மணிக்கு திருத்தத்துடன் சபையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தவிசாளர் அறிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட சமர்ப்பிப்பின் போது வாக்கெடுப்பிற்கு விடுவதா இல்லையா என – வாக்கெடுப்பு நடாத்தப்பட்ட நிலையிலேயே ஒத்திவைக்கப்பட்ட அமர்வு இன்று இடம்பெற்றது.
- Advertisement -