-வாழைச்சேனை நிருபர்-
மட்டக்களப்பு ஏறாவூர் சமூக நலன் அபிவிருத்தி ஒன்றியத்தினால் தெரிவு செய்யப்பட்ட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 100 ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஏறாவூர் மிச்நகர் இல்மா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
ஏறாவூர் சமூக நலன் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எம்.முபாஸ்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜீத் முன்னாள் மாகாண சபை சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், ஏறாவூர் பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எச்.ஏ.காரியப்பர், ஏறாவூர் சமூக நலன் அபிவிருத்தி ஒன்றியத்தின் உப தலைவரும் மனித உரிமைகள் மாவட்ட விசாரணை அதிகாரியுமான ஜ.எம்.தசீர்.மற்றும் செயலாளர் ஏ.ஆர்.வசீம்அக்ரம் மற்றும் அமைப்பின் ஆலோசகர்கள் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பொதிகளை வழங்கி வைத்தார்கள்.
மேற்படி மனித நேய உதவியானது தொடர்ந்து இத்தகைய சமூக நலன் பணிகளுக்கு உதவி வருகின்ற சமூக செயற்பாட்டாளர் ஜௌபர் பசீர் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



