இணையத்தளத்தில் அறிமுகமான பெண்ணிடம் 1 கோடி ரூபாய் இழந்த பொறியியலாளர்
இந்தியாவில் ஒன்லைன் மோசடி நிகழ்வுகள் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகின்றன. எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் படித்தவர்களே கூட இதில் ஏமாறுவதுதான் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. அதிலும் ஒன்லைன் மற்றும் தொழில்நுட்பம் குறித்து நன்கு அறிந்திருக்கும் மென்பொருள் பொறியாளர்களும் கூட ஏமாறத்தான் செய்கின்றனர். கடின உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்தை ஓரிரு நொடிகளில் அல்லது நாட்களில் இழந்து விடுகின்றனர்.
இந்தியா – குஜராத் மாநிலம் அஹமதாபாதை சேர்ந்த மென்பொருள் பொறியாளரின் வாழ்விலும் இத்தகைய மோசடி அண்மையில் அரங்கேறியுள்ளது. மேட்ரிமோனியல் தளத்தில் அறிமுகமான பெண்ணின் ஆலோசனையை கேட்டு, கிரிப்டோகரன்சியில் ரூ.1 கோடி பணத்தை இவர் முதலீடு செய்திருக்கிறார். ஆனால், அந்தப் பெண் லாவகமாக மோசடியை செய்துவிட்டு, தொடர்புகளை துண்டித்துக் கொண்ட நிலையில், இவர் பணத்தை இழந்துவிட்டு நிற்கிறார்.
அஹமதாபாதின் காந்திநகர் பகுதியில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர் குல்தீப் படேல். இவர் கடந்த 9ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்தார். கடந்த ஜூன் மாதம் மேட்ரிமோனியல் தளத்தில் அதிதீ என்ற பெண் அறிமுகம் ஆனதாகவும், அவர் தன்னை பிரிட்டனில் இருந்தபடி இறக்குமதி, ஏற்றுமதி தொழில்களை கவனித்து வருவதாக அறிமுகம் செய்து கொண்டதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
டீயழெஉழin என்ற பெயரில் கிரிப்டோகரன்சி இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் நல்ல இலாபம் கிடைக்கும் என்றும் வாடிக்கையாளர் உதவி மைய பணியாளர் போன்ற ஒருவர் மூலமாக அந்தப் பெண் பேச வைத்துள்ளார். இதை நம்பி முதலில் இந்தியமதிப்பில் ரூ.1 இலட்சம் முதலீடு செய்த குல்தீப் படேலின் கிரிப்டோ கணக்கில் ல் கூடுதலாக 78 டொலர் வரவு வைக்கப்பட்டிருந்தது. இதைடுத்து, 18 பரிவர்த்தனைகள் மூலமாக இந்தியமதிப்பில் ரூ.1 கோடி வரையிலான பணத்தை அவர் முதலீடு செய்தார். மேலும், செப்டம்பர் 3ஆம் திகதி தன்னுடைய கிரிப்டோ கணக்கில் இருந்து ரூ.2.59 இலட்சம் பணத்தை எடுப்பதற்கு அவர் முயற்சி செய்தபோது கணக்கு முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வாடிக்கையாளர் சேவை மைய போலி பணியாளரை குல்தீப் தொடர்பு கொண்டபோது, கணக்கு விடுவிக்க இந்தியமதிப்பில் ரூ.35 இலட்சம் செலுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். அதிதீயை தொடர்பு கொள முயற்சித்தும் பலனில்லை. அப்போதுதான் தான் ஏமாற்றபட்டிருப்பதை குல்தீப் படேல் உணர்ந்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்