ஆலையடிவேம்பு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பதுக்கி வைத்திருந்த ஊழியர் கைது!

அம்பாறை ஆலையடிவேம்பு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில், சட்டவிரோதமாக 800 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை இரவு முற்றுகையிட்ட பொலிஸார், கலன்களில் 800 லீற்றர் டீசல் நிரப்பப்பட்டு மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து மீட்டனர்.

இதன்போது, சந்தேகத்தின்பேரில் அங்கு கடமையாற்றும் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.