
ட்விட்டர் அலுவலகத்தின் வாடகையை செலுத்தாத எலான் மஸ்க்
எலான் மஸ்க் ட்விட்டரின் தலைவராக எலான் மஸ்க் பதவியேற்ற உடனேயே அதிரடியான பல விதமான மாற்றங்களையும் குழப்பத்தையும் ஏற்படுத்தினார் என்று பல தரப்பில் விமர்சனம் செய்யப்பட்டது.
ட்விட்டரின் நிறைவேற்று அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உட்பட பல ஆயிரம் ஊழியர்களை ஒரே நாளில் பணிநீக்கம் செய்தார். அதுமட்டுமில்லாமல் புளூ டிக் தேவையென்றால் அதற்கு கட்டாயமாக சந்தா செலுத்த வேண்டும் என்பதையும் அறிவித்தார்.
இந்த விடயம் சர்ச்சையை உண்டாக்கிய நிலையில் தற்காலிகமாக இதை திரும்பப்பெற்றார். இந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம்.
அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகரில் கொலம்பியா ரெய்ட் என்னும் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் ட்விட்டர் தலைமை அலுவலகம் இயங்கி வருகின்ற நிலையில் இந்த அலுவலகத்திற்கான வாடகை முறையாக செலுத்தப்படவில்லை எனத் தெரியவருகின்றது.
இதனால் ட்விட்டருக்கு கொலம்பியா ரெய்ட் நிறுவனம் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. அதில் வாடகைத் தொகையான 1,36,250 அமெரிக்க டாலரை 5 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.