மன்னாரில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உட்பட மூன்று கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின

 

-மன்னார் நிருபர்-

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை மூன்று அரசியல் கட்சிகள் இன்று புதன்கிழமை  காலை மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிஇ ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணிஇஐக்கிய தேசியக் கட்சி ஆகிய மூன்று கட்சிகள் இன்று  காலை மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தி உள்ளனர்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ் தேசிய கட்சி ஆகிய 5 கட்சிகளும் இணைந்து கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகள் உள்ளிட்ட மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளனர்.

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி சார்பாக முசலி பிரதேச சபைக்கு இன்று புதன்கிழமை  காலை கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி சார்பாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஏ.எஸ்.முஹம்மது பஸ்மி மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.