பேரனால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த மூதாட்டி!

தம்புத்தேகம, மல்வானேகம பகுதியில், நேற்று புதன்கிழமை இடம்பெற்ற குடும்பத் தகராறு ஒன்றின் போது, தனது பேரனால் நடத்தப்பட்ட தாக்குதலில் 82 வயதுடைய மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த மூதாட்டிக்கும் அவரது பேரனுக்கும் இடையில் நிலவிய தனிப்பட்ட குடும்பத் தகராறு ஒன்றே இந்த விபரீதத்திற்குக் காரணமாகியுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், 23 வயதுடைய சந்தேகநபர் தனது பாட்டியை பொல்லால் தாக்கியுள்ளார்.

இத்தாக்குதலால் பலத்த காயமடைந்த மூதாட்டி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய சந்தேகநபர் தம்புத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மூதாட்டியின் உடலம் மீதான மரண பரிசோதனைகள் மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.