இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு அனுமதி

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு கால்நடை உற்பத்திகள் மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த முட்டைகள் இன்று புதன்கிழமை வழங்கப்பட்டு, நாளை வியாழக்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என அரச வர்த்தக இதர சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, உணவக மற்றும் பேக்கரி உரிமையாளர்களுக்கு முட்டை 35 ரூபாய்க்கு விற்கப்படும்.

நாட்டில் முட்டையின் விலையைக் கட்டுப்படுத்தவும், முட்டை தட்டுப்பாட்டைப் போக்கவும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை ஏற்றி வரும் முதல் கப்பல் கடந்த 23ம் திகதி நாட்டை வந்தடைந்தது.