முட்டை தட்டுப்பாட்டுக்கு தீர்வு இறக்குமதி அல்ல

முட்டை தட்டுப்பாட்டுக்கு இறக்குமதி தீர்வு அல்ல, உள்ளூர் உற்பத்தியாளர்களை பலப்படுத்துவதே தீர்வு என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் அஜித் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டின் தேவைக்கேற்ப முட்டைகளை வழங்க முடியும் என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.