
விரைவில் முட்டைக்கான விலை சூத்திரம்
அண்மையில் கோப் குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய முட்டைக்கான விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
அதன்டி, நுகர்வோர் அதிகார சபை மற்றும் கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களம் என்பன இணைந்து முட்டைக்கான விலை சூத்திரத்தை தயாரித்துள்ளன.
குறித்த விலை சூத்திரம் கோப் குழுவில் எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படும்.
அதன் பின்னரே முட்டைக்கான விலை தீர்மானிக்கப்படும் என கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமாலி கொத்தலாவல மேலும் தெரிவித்துள்ளார்.