முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும், சிவப்பு நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று சனிக்கிழமை முதல் இந்த அதிகபட்ச சில்லறை விலைக்கு உட்பட்டே முட்டை விற்பனை செய்யப்பட வேண்டும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ய முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க