
முட்டை உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர்
முட்டையின் விலைக்கு கட்டுப்பாட்டு விலையை விதித்ததன் மூலம் முட்டை உற்பத்தியாளர்கள் தற்போது கடும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக, அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடுமையான உணவு நெருக்கடி நிலவும் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ள பின்னணியில் முட்டை உற்பத்தி கூட பின்தங்கியுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது உரங்களை உரிய நேரத்தில் வழங்கத் தவறியதன் காரணமாக இந்நாட்டில் சமூகம் உணவுப் பிரச்சினையில் சிக்கியுள்ளதாகவும் விவசாய சமூகமும் அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளதாகவும் அவர் வலியுறுத்துகிறார்.
முட்டை சந்தையில் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு அரசாங்கம் அதன் விலைக்கு கட்டுப்பாட்டு விலையை விதித்தமையே பிரதான காரணம் என தலைவர் மேலும் தெரிவிக்கிறார்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை தட்டுப்பாடு காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் தமது வியாபாரங்களில் இருந்து விலகி இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
